Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 குட பால் அபிஷேகம்

உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 குட பால் அபிஷேகம்

உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 குட பால் அபிஷேகம்

உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 குட பால் அபிஷேகம்

ADDED : ஜூலை 25, 2011 11:25 PM


Google News

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் 1008 குட பால் அபிஷேகம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு 1008 குட பால், காவடி தேர் வீதியுலா வேடுசெட்டி குளக்கரையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

இதனை ஸ்ரீசாரதா ஆசிரம யதீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியா அம்பா துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சுப்ரமணிய சுவாமி கோவிலை ஊர்வலம் சென்றடைந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங் காவலர் குழு தலைவர் செல்லையா, உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us