/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தமிழ்நாட்டில் முதன்முறையாக அகன்ற வண்ணத்திரை அறிமுகம்தமிழ்நாட்டில் முதன்முறையாக அகன்ற வண்ணத்திரை அறிமுகம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அகன்ற வண்ணத்திரை அறிமுகம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அகன்ற வண்ணத்திரை அறிமுகம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அகன்ற வண்ணத்திரை அறிமுகம்
ADDED : ஆக 08, 2011 03:09 AM
நாமக்கல்: தமிழ்நாட்டில் முதல் முறையாக, பல்வேறு நிகழ்ச்சிகளை மிகப்பெரிய வண்ணத்திரையில் காணும் எல்.ஈ.டி., சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகள், கோவில் விழாக்கள், சங்க ஆண்டு விழா, சிறப்பு கூட்ட அரங்குகள், கருத்தரங்குகள், விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்தல், கல்லூரி விழாக்கள் என, அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தும் வகையில், மிகப்பெரிய அகன்ற வண்ணத்திரையில் காணும் எல்.ஈ.டி., தமிழகத்தில் முதல் முறையாக, சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை, சேலம் ஃபேர்லேண்ட்ஸ் பகுதியில் செயல்படும் ஸ்ரீ பிரபு வீடியோஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. மிகப்பெரிய அகன்ற வெண்திரையை கொண்ட இந்த எல்.ஈ.டி.,யில், சூரியன் சுட்டெரிக்கும் பகல் நேரத்தில் கூட, திறந்த வெளியிலும் நிகழ்ச்சிகளை துல்லியமாக காண முடியும். வாட்டர் புரூப் உள்ளதால், மழை பெய்தாலும் ஒளிப்பரப்பு செய்யப்படும். நிகழ்ச்சிகள் தங்கு, தடையின்றி காண முடியும். ஒரே நேரத்தில், 20 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில், கடைசி வரிசையில் உள்ள நபரும் ஒளிப்பரப்பு நிகழ்ச்சியை தெளிவாக காணலாம் என, ஸ்ரீ பிரபு வீடியோஸ் உரிமையாளர் பாபு தெரிவித்துள்ளார். லேப்-டாப் கம்ப்யூட்டர் மற்றும் கேமரா மூலமும், நாம் பதிவு செய்யும் நிகழ்ச்சிகளை தெளிவாக காணலாம். எச்.டி., முறையில் ஒளிபரப்பப்படுவதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் தெளிவாக காணமுடியும். இந்த மிகப்பெரிய அகன்ற வண்ணத்திரையில் ஒளிப்பரப்புவதால் அனைவரும் நிகழ்ச்சிகளை ஒருசேர அமர்ந்து காணமுடியும். ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், போன்ற விளம்பர நிறுவனங்களும் தங்களது கடை நிகழ்ச்சிகள், விளம்பரங்களை இதில் ஒளிபரப்பி அனைவரையும் எளிதில் கவர முடியும். மேலும் தகவல் பெற விரும்புவோர் 98423-99554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


