/உள்ளூர் செய்திகள்/தேனி/பாதாள சாக்கடை பணி கவுன்சிலர்கள் புகார் மனுபாதாள சாக்கடை பணி கவுன்சிலர்கள் புகார் மனு
பாதாள சாக்கடை பணி கவுன்சிலர்கள் புகார் மனு
பாதாள சாக்கடை பணி கவுன்சிலர்கள் புகார் மனு
பாதாள சாக்கடை பணி கவுன்சிலர்கள் புகார் மனு
ADDED : செப் 09, 2011 11:27 PM
தேனி : உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளுமாறு கவுன்சிலர்கள் புகார் மனு அனுப்பி வருகின்றனர்.தேனியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன.
ரோடுகளை தோண்டி, பாதாள சாக்கடை பைப் அமைத்து மீண்டும் ரோட்டை மூடுவதற்கு பல மாதங்களாகிறது. அதன் பின்னர் அப்பகுதியில் ரோடு அமைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகி விடும்.எனவே ரோடுகளை தோண்டிய அளவு போதும். நல்ல நிலையில் உள்ள மற்ற ரோடுகளை தோண்ட வேண்டாம். அப்படி தோண்டினால் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும்.எனவே பாதாள சாக்கடை பணிகளை உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர் மேற்கொள்ளுங்கள் என வலியுறுத்தி கவுன்சிலர்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர்.கவுன்சிலர் நாராயண பாண்டியன் கூறுகையில், 'எனது வார்டு முழுக்க மிகவும் குறுகிய தெருக்களாக உள்ளன. ரோட்டை தோண்டினால் மக்கள் நடக்கவே முடியாது. தற்போது ரோட்டை தோண்ட வேண்டாம் என மனுக்கொடுத்துள்ளேன்' என்றார்.


