ADDED : அக் 11, 2011 01:39 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சரகம், ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சொக்கலிங்க படையாட்சி மனைவி முத்துலெட்சுமி(46).
இவர் நேற்று முன்தினம் மாலை, ரெட்டிபாளையம் கிராமத்தில் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள வயலில், கூலி ஆட்களுடன் நடவு நடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, ஏற்பட்ட திடீர் சூறைக்காற்று மற்றும் மின்னல் தாக்கிய விபத்தில், சம்பவ இடத்திலேயே முத்துலெட்சுமி உடல் கருகி இறந்தார். மின்னல் தாக்கியதால் இறந்து போன முத்துலெட்சுமியின் சடலம் பிரேத பரிசோதனக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுபற்றி முத்துலெட்சுமியின் கணவர் சொக்கலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


