Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அய்யா... அவங்க எதுக்கு; மக்கள் நாங்க சொல்றோம்... நீங்க கேளுங்க...

* 'மார்ச் 31, 2026க்குள் நாட்டில் மாவோயிஸ்ட், நக்ஸல்கள் இருக்க மாட்டார்கள்' என்று, தான் சொன்னபடியே செயலாற்றி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன் வெற்றியை நெருங்கி விட்டதை அறிவீர்களா'ன்னு, ஒழிக்க முடியாத கொசுக்களுக்கு நடுவுல பரிட்சைக்கு படிச்சுட்டு இருக்குற எங்க பிள்ளைகள்கிட்டே கேட்குறவன் ஹீரோ!

* 'நம் தேசத்திற்கு கவுரவம் தரும்விதமாய் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட டில்லி ஏ.ஐ., மாநாட்டில், அரை நிர்வாணமாய் வந்த காங்கிரசாருக்கு சமாஜ்வாதி தலைவர் தெரிவித்த கண்டனம் போல், தி.மு.க., தலைவராக வேண்டாம்... தமிழர்களின் தேசப்பற்றை பிரதி பலிக்கும் தமிழக முதல்வராக கொதித்திருக்க வேண்டாமா'ன்னு கண் சிவக்குறவன் ஹீரோ!

* 'இந்திய நாட்டுக்கு 'காந்தி தேசம்' என்று பெயர் சூட்ட வேண்டும் என ஈ.வெ.ரா., சொன்னதாக நம் முதல்வர் சொல்கிறார்; ' நகைகளுடன் நள்ளிரவில் ஒரு பெண் பயமின்றி தனியாக நடமாடும் நாடே உண்மையான சுதந்திரம் அடைந்த நாடு' என்று காந்தி சொல்லி இருக்கிறாரே... பாலியல் குற்றங்கள் மிகுந்திருக்கும் இன்றைய தமிழகத்தை உள்ளடக்கிய இந்தியாவிற்கு, ஈ.வெ.ரா., சொன்ன பெயர் பொருந்துமா'ன்னு யோசிக்கிறவன் ஹீரோ!

* 'எங்கள் ஆட்சியில் 4,335க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடந்துள்ளது; 8,436 கோடி ரூபாய் மதிப்பிலான 8,107 ஏக் கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனச் சொல்லும் தி.மு.க., அரசு, அறநிலையத்துறை கோவில்களில் இதுவரை பெற்ற காணிக்கை வருமானம் எவ்வளவு என்பதைச் சொன்னதா'ன்னு கேள்வி எழுப்புறவன் ஹீரோ!

அய்யா... இப்படி நாங்க சொல்லிக்கிட்டே போவோம்... சொல்றதுக்கு எங்ககிட்டே அவ்வளவு இருக்கு; எங்கே... எங்களை மாதிரி நீங்க ஏதாவது சொல்லுங்க பார்ப்போம்...

வெல்ல்ல்ல்... 'எதிரியை ஒழிக்க எதிரியின் எதிரியோடு கூட்டு சேர்பவன் தந்திரன்' என்று அறிந்தும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் வழிவழியாய் சேவகம் செய்யும் கூட்டத்திடம், அவனை 'அடிமை' எனச் சொல்லி எகத்தாளம் செய்து, மக்களை ஏமாற்றி விட்டதாய் நம்பும் இளவரசனே ஹீரோ!

ஜி... சூப்பர் ஜி; சூரியனுக்கு 'டார்ச்' அடிச்ச மாதிரி... செம!

ஆமா... யாரு ஹீரோ? கேட்குறாங்கல்ல... சொல்லுங்க ஜி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap