Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: தடயம் (வெப் சீரிஸ்)

நாங்க என்ன சொல்றோம்னா...: தடயம் (வெப் சீரிஸ்)

நாங்க என்ன சொல்றோம்னா...: தடயம் (வெப் சீரிஸ்)


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தத்தி தத்தி நடைபயிலும் தடயம்

ஆந்திர எல்லை தொடும் தமிழக பகுதியில் இரண்டு தம்பதியர் கொல்லப்படுகின்றனர். காவல் ஆய்வாளர் லட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் அதியமான் கூட்டணி, 'நடந்த கொலைகள் ஏழு' என்று கண்டறிய, ஆந்திர காவல்துறையோ, '76 கொலைகள்' என்கிறது; பாதகம் செய்தவர்கள் யார்?

கொலைக்களத்தின் காலடி தடங்களை வைத்து 'கொலை செய்தது இருவர்' என்று கண்டறிவதில் துவங்கி, பிடிபட்ட கொலைகாரனிடம் க்ளை மாக்ஸை உணர்த்துவது வரையிலான அதியமானின் சாமர்த்தியத்திற்கு 'பொன்னாடை' போர்த்துகிறது சமுத்திரக்கனியின் நடி ப்பு; ஆனால், அதியமான் எனும் பாத்திர

வார்ப்பு துப்பு துலக்குதலில் அதன் உச்சம் தொடவில்லை !

'தங்களது நல் வாழ்வு சிதைந்து போக காரணமானவர்களை பழிவாங்க இருவர் செய்வதே 76 கொலைகள்; இதில், 69 பேர் பாதிப் பை விதைத்தவர்களோ, அவர்களின் அன்புக்குரியவர்களோ அல்ல' என்கிற மாற்று கோணத்தில் திரைக்கதையை அணுகி, ஐந்து அத்தியாயங்களை ஓரளவு காப்பாற்றி இருக்கிறார் இயக்குனர் நவின்குமார் பழனிவேல். இறுதி அத்தியாயத்தில் கொலைகாரர்களுக்கு வெற்றி; இது, அடுத்த பாகத்திற்கான துவக்கப்புள்ளி!

கதையின் காலகட்டம் 1999 என்பதால் காவலர்களின் விசாரணை முறை மீது எதிர்பார்ப்பு எழுந்தாலும், ஒரு காட்சியில் கூட இந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட வில்லை; 'த்ரில்லர்' உணர்வுக்கான எந்த தடயமும் இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை; குறைந்தபட்சம், தொலைபேசி வசதியில்லாத சூழலைக் கொண்டு ஒரு திருப்பம் கூட புனையப்படவில்லை!

கொலைக்கான காரணம், கொலையாளியை கண்டுபிடிக்கும் பாணி, தடயங்களால் சிக்கல்களை அவிழ்க்கும் முறை என, த்ரில்லருக்கான கூறுகளில் எதையும் சரிவர திரைக்கதைக்குள் பயன்படுத்தாதது பெரும் குறை. சமுத்திரக்கனியின் நடிப்பும், சில 'திடுக்' திருப்பங்களும் மட்டுமே இந்த 127 நிமிட இணைய தொடரை கரை சேர்க்கின்றன.

ஆக...

'த்ரில்லர்' படைப்புகளின் தாய் கழகமான 'மலையாள சினிமா' ரசிகர் மன்றத்தில் இைணய வழிகாட்டும் படைப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap