Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

' வெறுப்பு அரசியல்' வெறுக்கும் நம் முதல்வர், 'இஸ்ரேலில் நம் பிரதமருக்கு கிடைத்த மாபெரும் கவுரவத்திற்கு ஏன் வாழ்த்தவில்லை' என்று யோசித்தபடியே, 'திராவிட மாடல்' ஆட்சி தந்த அழகு பூங்காவில் உலவியபோது, குளத்தில் நீந்திய வாத்து இப்படியெல்லாம் கேட்பதாய் தோன்றியது...

1 'பில்கிஸ் பானுவிற்கான நீதி ஆறுதல் அளிக்கிறது' என பதிவிட்ட நம் முதல்வர், 'சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து பற்றி என்ன பதிவிட்டார்' என வாத்து நான் யோசிக்கிறேன்; நீ?

2 'தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் எனக்கு என்ன குறை' என முதல்வர் அன்று பேசியதையும், இன்றைய அரசு ஊழியர்களின் போராட்டம், நாங்குநேரி சம்பவத்தையும் முடிச்சிட்டு வாத்து நான் யோசிக்கிறேன்; நீ?

3 'என் மீது நம்பிக்கை இல்லாதது போல் பேசி, மனம் முழுக்க என் சிந்தனையோடு இருக்கும் பக்தனை என் அருகில் குடியேற வைத்து விடுவேன்; ஸ்ரீரங்கமோ, கோவை காந்திபுரமோ வந்து பார்' என கடவுள் உணர்த்துவதாக வாத்து நான் யோசிக்கிறேன்; நீ?

4 'மக்களுக்கான அரசின் நிதிச்செலவை ஏதோ தன் சொந்த சேவை போல் பிரதமர் காட்டிக் கொள்ளலாமா' என்று மா.கம்யூ., சீதாராம் யெச்சூரி கேட்டது, இன்றைய முதல்வர்களுக்கும் பொருந்தும் தானே' என வாத்து நான் யோசிக்கிறேன்; நீ?

5 அவர் போலவே உ டை அணிந்து, துண்டு சுழற்றி வீசுவதெல்லாம், 'அவர் போலத்தான் நான்' என சிலிர்ப்பூட்டும் முயற்சியா, 'என் போலத்தான் அவர்' எனச் சிரிப்பூட்டும் திட்டமா' என வாத்து நா ன் யோசிக்கிறேன்; நீ?

6 'அரசியலில் மத நம்பிக்கைகளை கலக்கக் கூடாது' என்பவர் நம் முதல்வர்; அவரது துணைவிக்கு 'அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ்' வழங்கப்பட்டும் இப்போதுவரை அவர் செல்லாதது ஏன்' என வாத்து நான் யோசிக்கி றேன்; நீ?

7 'பேரியக்கத்தின் தலைவர் பொறுப்பை 50 ஆண்டு கால தொடர் உழைப்பால் அடைந்திருக்கிறேன்' என முதல்வர் சொல்கையில், தி.மு.க.,வில் இருக்கும் மிக மூத்த உறுப்பினர்களின் பதவி பற்றி வாத்து நானே யோசிக்கிறே ன்; நீ?

7 ½ ஆமாம்... நான் 'வாத்து' எனில், நீ யார்?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap