Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ 'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை

'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை

'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை

'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை

ADDED : மார் 25, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
கொளுத்தும் வெயில் சற்று தணிந்த ஒரு மாலை வேளை. வீட்டருகே உள்ள ஒரு பூங்காவில், சித்ராவும், மித்ராவும் மர நிழலில் அமர்ந்தனர்.

''அக்கா, கலெக்டர் ஆபீஸ் சேம்பர் ஹாலில், எலக் ஷன் பத்தி கட்சிக்காரங்க கலந்துகிட்ட மீட்டிங் நடந்துச்சு. அதில, எலக் ஷன் டைமில், என்ன செய்யணும்ங்கிறபத்தி டீடெய்லா பேசுனாங்க. ஆனா, அந்த மீட்டங்கிற்கு ரிப்போர்ட்டர்ஸ் யாரும் அலவ் பண்ணலை,'' என ஆரம்பித்தாள் மித்ரா.

''அவங்க போனாத்தானே, மக்களுக்கு சேதி போகும்,'' சித்ரா ஆதங்கப்பட்டாள்.

''இதயும் கேளுங்க்கா. அங்கிருந்த ரிப்போர்ட்டர்களை, 'வாங்க டீசாப்பிடலாம்னு' நைசா கூட்டிட்டு போய்ட்டாங்க. டீ குடிச்சிட்டு வந்தவர்களை 'நோ பெர்மிஷன் பார் பிரஸ்'னு கூலா சொல்லிட்டாங்க. எலக் ஷனை பொறுத்தவரைக்கும், ரொம்ப வெளிப்படைத்தன்மையோடு இருக்கோணும்னு எலக் ஷன் கமிஷனே சொல்லுது. ஆனா, இங்க என்னடான்னா, மீட்டிங்கையே ரகசியமா நடத்தறது ஏன்னே தெரியல,''

''வோட்டர்ஸ் லிஸ்டிலுள்ள குளறுபடிகள், எலக் ஷன் டைமில ஏற்படற பிரச்னைகளைப் பத்தி கூட்டத்தில் நாங்க பேசியது, மக்களுக்கு தெரியாமல் போச்சேன்னு, கட்சிக்காரங்களும் செம காண்டு ஆகிட்டாங்க. ஓ.கே., ரைட்டு விடு, அடுத்த மீட்டிங்கில, இந்த மேட்டரை வெச்சு செஞ்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க...'' என்றாள் மித்ரா.

தொண்டர்களை உசுப்பேற்றும் கட்சி


''அதிகாரிகள் எப்பவுமே அப்டித்தான் மித்து. அவங்களுக்கு காரியம் ஆகோணும்னா, எல்லாம் சொல்வாங்க,'' சொன்ன சித்ரா, ''நல்லுாரிலுள்ள பிரபலமான கோவிலில், நன்கு வளர்ந்த ரெண்டு வேப்ப மரத்தை வெட்டிட்டாங்க. இதப் பார்த்த மக்கள், வருவாய்த்துறைக்கு புகார் பண்ணிடாங்க. அதிகாரிகளும் போய் ஆய்வு செஞ்சப்ப, ''அது ஏற்கனவே முறிஞ்சதால், அப்புறப்படுத்தினோம்னு அறங்காவலர்கள் விளக்கம் கொடுத்தாங்களாம்,''

''இதேபோல, பெரியபாளையம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடத்த அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து, கட்டணத்தை குறைக்க சொல்லி அறிவுறுத்தினாங்களாம். கோவில்களில் இது போன்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லாத வகையில் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்,'' என்றாள்.

''அக்கா, அ.தி.மு.க.,வில, ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்துள்ளனர். அந்த கமிட்டியே கட்சியின் கிளையாக மாறும் என்று கூறியுள்ளனர். இதனால பூத் ஏஜென்டே கிளை செயலாளராக மாறவும் வாய்ப்பு உள்ளதால், பலரும் உற்சாகமாக வேலை செய்யறாங்களாம். கூட்டணியை கட்சி பார்த்து கொள்ளும். நீங்கள் கட்சிக்கு அதிக ஓட்டு வாங்குவதற்கான பணியை துவக்கி விடுங்கள் என்று உசுப்பேற்றிக் கொண்டிருக்கின்றனர்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

'தெருநாயால் கடிப்பட்டு சாகுற ஆடு, கோழிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு அறிவிச்சிருக்காங்கள்ல. இந்த விவகாரத்துல அரசியல் சாயம் பூசப்படறதால விவசாயிங்க 'அப்செட்' ஆகியிருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.

''அப்படியா... அதிலயும் அரசியல் புகுந்துடுச்சா?'' 'உச்' கொட்டினாள் மித்ரா.

''ஆமான்டி மித்து. இழப்பீடு கோரிக்கை தொடர்பாக, அரசியல் பாகுபாடின்றி விவசாயிங்க தொடர் போராட்டம் நடத்தினாங்க. மினிஸ்டர்ஸ், எம்.எல்.ஏ.,ன்னு பலர் முதல்வர் கவனத்துக்கு கொண்டு போனாங்க. எப்படியோ ஒரு வழியா, அரசாங்கம் இழப்பீடும் அறிவிச்சிடுச்சு. இப்போ என்னன்னா... ஒரு எம்.எல்.ஏ.,வோட ஆதரவாளர்கள் சிலரு, அவரு தான் இழப்பீடு வாங்கித்தர குரல் கொடுத்தாருன்னு 'பிளக்ஸ்' அடிச்சு, பரப்பிட்டு வர்றாங்களாம்,''

''இன்னொரு சைடு, மினிஸ்டர்கள் காரணம்னு சொல்லிட்டு இருக்காங்களாம். இப்படி ஆளாளுக்கு அரசியல் பண்றதால, விவசாயிங்க 'அப்செட்' ஆயிட்டாங்க. இதனால, போராட்டத்தை முன்னெடுத்த விவசாய சங்கத்துக்காரங்க, மினிஸ்டர்ஸ், எம்.எல்.ஏ.,ன்னு ஒவ்வொருத்தரையா பார்த்து, நன்றி சொல்லிட்டு வர்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''நல்லபடியா போய்கிட்டு இருக்கற சில விஷயங்கள் வீணாக போவதற்கு, அரசியல் கட்சிக்காரங்களே காரணமாகிடறாங்க, என்னதான் பண்றது? சில விஷயங்களை அரசியலாக்காமல் இருக்கிறது தான் நல்லது,'' அங்கலாய்த்தாள் மித்ரா.

'பறக்காத' படை அலுவலர்கள் கவலை


''மித்து, இந்த வாரம் 10ம் வகுப்புக்கு எக்ஸாம் துவங்குது. தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை அலுவலர்களுக்கு, இதுவரை வாகனம் ஏற்பாடு செய்யலையாம். இதுபற்றி கேட்டால், 'எப்.சி.,'க்கு போன வண்டி வரலை. இப்போதைக்கு உங்ககிட்ட இருக்கிற வண்டியை ஓட்டி, பில் வையுங்க. அப்புறம் பாத்துக்கலாம்,' என்று சொன்னார்களாம். அதுக்கு, பறக்கும் படையினர், 'மூனு மாசம் முன்னாடி இருந்து சொல்லிட்டு தான் இருக்கோம். ஆனா, அசையவே மாட்டேங்கிறாங்க,'ன்னு பறக்கும் படை அதிகாரிகள், புலம்பறாங்களாம்...''

'நாய்க்கு பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களான்னு' கிண்டலாக கூறி, புலம்புதாம் பறக்கும்படை.

''நம் நாட்டு ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்திற்காக, 12ம் தேதி முதல் ஆள் சேர்ப்புக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இது குறித்த செய்திக்குறி ப்பை மாவட்ட நிர்வாகம், 10 நாள் கழிச்சு சாவகாசமாக வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மத்திய அரசு தொடர்பான தகவல்கள், அறிக்கை, அழைப்புகள் என எல்லாத்தையும் லேட்டாக வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது. அரசியல்வாதிகள் தான், காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்கின்றனர் என்றால், அதிகாரிகள் அவர்களை விட பல மடங்கு அதிகம்,'' என்றாள் சித்ரா.

''என்னே ஒரு விசுவாசம்...'' சிரித்த மித்ரா, ''பல்லடத்துக்கு பக்கத்திலுள்ள ஒன்றியத்தில, ஆபீசருக்கு வசூல் செய்து கொடுக்கும் ஊழியர்களைத் தான் மிகவும் பிடிக்கிறதாம். அவரது வசூல் வேட்டைக்கு ஒத்து வராத அலுவலர்களை லீவில் போகச்சொல்லி சாதகமாக நடப்பவர்களை, தனது மிரட்டலுக்கு பயந்தவர்களை வைத்துக் கொண்டு வசூல் வேட்டையாடுகிறாராம். இவரது, 'அட்ராசிட்டி' தாங்காமல், ரெண்டு ஆபீசர் 'லாங் லீவ்' போட்டு விட்டனர். 'குமார விஜய'த்துக்கு, கலெக்டர் எப்போது, 'எண்ட் கார்ட்' போடப்போகிறார் என்பது தெரியலை,'' என்றாள்.

போதை கும்பல் அட்டகாசம்


''வீரபாண்டி பகுதியில திருவள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் போன்ற குடியிருப்பு ஏரியாவில், ராத்திரி, பகல்னு எந்நேரமும், 'குடி'மகன்கள் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. பல்லடம் ரோடு மதுக்கடையில், 'சரக்கு' வாங்கிட்டு, வீடு மற்றும் தோட்டங்களுக்குச் செல்லும் வழியில் கும்பலாக அமர்ந்து குடிச்சு கும்மாளமிடுகின்றனர். அதிலும், சிலர் கஞ்சா அடிச்சிட்டு, பிரச்னை பண்றாங்களாம். யாராவது கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனராம். பல்லடத்தில் நடந்தது போல் இங்கும் ஏதாவது விபரீதமாக ஏற்படும் முன் போலீசார் கொஞ்சம் கண்டுகொண்டால் பரவாயில்ல...'' என்று சொன்ன சித்ரா, ''இதே மாதிரி, குமார் நகர், முருங்கப்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பு டேமேஜ் ஆனதால, பலரும் காலி செய்து விட்டனர். கேட்பாரற்று கிடக்கும் இந்த வீடுகளில் ராத்திரிகளில், போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமா இருக்குதாம். இதனால, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பயத்திலேயே வாழ்கின்றனர்,'' என கூடுதல் தகவல் சொன்னாள்.

''அக்கா... அங்க மட்டுமில்ல. பல ஏரியாக்களில், இந்த பிரச்னை அதிகமாயிட்டே போகுது. எங்க போய் முடியுமோ?'' என ஆதங்கப்பட்ட மித்ரா, ''ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஒருத்தரை, சைபர் கிரைம் போலீசார் அரெஸ்ட் செஞ்ச விஷயத்தை அமுக்கிட்டாங்க, தெரியுங்களா...'' என்றாள்.

''அப்படி என்ன விஷயம் மித்து''

''பலரிடம் ஏதேதோ பொய் சொல்லி பேங்க் அக்கவுன்ட் விவரங்களை வாங்கி, சைபர் மோசடி கும்பல்களிடம் கொடுத்தது தொடர்பா, ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருத்தர் மகனை சைபர் கிரைம் போலீசார் அரெஸ்ட் பண்ணாங்க. விஷயம் வெளியில தெரியாம கமுக்கமாக பார்த்துக்கிட்டாங்க. இருந்தாலும், இதுபற்றி தெரிஞ்சு கேட்ட ரிப்போர்ட்டரிடம், 'ைஹயர் அபிஷியல்ஸ் பிரஸ்க்கு கொடுக்க வேண்டாம் சொல்லிட்டாரு'ன்னு மூடி மறைக்கிறாங்க. பல நாட்கள் கண்காணித்து கையும்களவுமாக பிடித்த விஷயத்தை மூடி மறைப்பது தவறுன்னு இவங்களுக்கு ஏன் தெரியலே...'' ஆவேசப்பட்டாள் மித்ரா.

''நீ... சொன்ன மாதிரி, காங்கயம் சப்-டிவிஷனிலும் அப்படி தான் இருக்கு. அந்த ஆபீசர் எந்த தகவலையும் வெளியே சொல்ல கூடாது என்று சொல்லிட்டாரு. ஆனா, மாவட்ட ஆபீசரோ. ஒவ்வொரு வழக்கிலும் சிறப்பாக செயல்படும் விஷயத்தை வெளியே சொல்லுங்கனு சொல்றார். சப்-டிவிஷன் ஆபீசரின் நடவடிக்கையை திருத்த, பெரிய ஆபீசர் தான் மனசு வைக்கோணும்...'' என்றாள் சித்ரா.

உளவு பார்க்காத ஒற்றர் படை


''பஞ்சாப் மாநிலத்தில விவசாயிகள் மீதான நடவடிக்கையை கண்டிச்சு, திருப்பூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவிச்சாங்க. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் கூட, கண்காணிப்பையும் மீறி, பயணிகளோடு, பயணிகளாக கலந்துட்ட விவசாயிகள் இன்டர்சிட்டி ரயில் வந்தவுடன், தண்டவாளத்தில் இறங்கிட்டாங்க,''

''இத்தனை கண்காணிப்பையும் மீறி, விவசாயிகள் ரயிலை மறித்ததால், போலீஸ்காரங்க நொந்துட்டாங்க. ரயில் மறியல்னு சொன்னாலே, ஸ்டேஷனுக்கு வெளியே தடுத்து நிறுத்தி அரெஸ்ட் செஞ்சிருவாங்க. ஆனால், ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா, உண்மையிலேயே ரயில் மறியல் பண்ணிட்டாங்க. இது விஷயத்துல, ஒற்றர் படை என்ன செஞ்சிட்டு இருந்தாங்கனு தெரியல,''

''விவசாயிகள்தானே. என்ன செஞ்சிடப்போறாங்கன்னு, அசால்ட்டா நெனைச்சாங்க. ஆனா, அவங்க சத்தமில்லா செஞ்சிட்டு போயிட்டாங்கன்னு, சில போலீசார் தங்களை தாங்களே நொந்துட்டாங்களாம்...'' சிரித்தபடியே மித்ரா சொன்னதும், பதிலுக்கு சிரித்த சித்ரா, ''பணமில்லாமல் தாலுகா ஆபீசில எந்த வேலையும் நடக்கறதில்லையாம்...'' என்றாள்.

''எந்த தாலுகா ஆபீஸ்னு வெவரமா சொல்லுங்க,''

''அட... லிங்கேஸ்வரர் ஊரில் தான். டெபுடி லேடி ஆபீசர் ஒருத்தர், பணத்தை கண்ணில் பாக்காம எந்த வேலையும் செய்யறதில்லையாம். பணம் இல்லாட்டி, கிடப்பில் போட்டு வச்சுக்கிறார். இவரு, ஏற்கனவே சிட்டியில் இருந்தப்ப, பட்டையை கிளப்பிட்டு இருந்தாங்க. இன்னமும், அதே அதிரடி வசூல்பாணி தான் அங்கேயும் நடக்குது. இதே மாதிரி தெற்கால உள்ள ஊர் வி.ஏ.ஓ., ஆபீசில், உதவியாளர் ஒருத்தரை, தனக்கு உதவியா இருக்கட்டும்னு சம்பளம் கொடுத்து நியமிச்சிருக்காரு. இப்ப அவரு தான், அரசு ஆவணங்களை கையாண்டு, மக்களிடம் அதிகாரம் பண்ணி, 'வரி' போட்டு தள்ளுறாரு,'' என்று சொன்ன சித்ரா, ''ஓகே மித்து, போலாம்...'' என்றதும் மித்ராவும்புறப்பட்டாள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us