Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கடையாணி/பென்ஸ் 'சி.எல்.ஏ., பி.இ.வி.,' 20 நிமிட சார்ஜில், 400 கி.மீ., ரேஞ்ச்

பென்ஸ் 'சி.எல்.ஏ., பி.இ.வி.,' 20 நிமிட சார்ஜில், 400 கி.மீ., ரேஞ்ச்

பென்ஸ் 'சி.எல்.ஏ., பி.இ.வி.,' 20 நிமிட சார்ஜில், 400 கி.மீ., ரேஞ்ச்

பென்ஸ் 'சி.எல்.ஏ., பி.இ.வி.,' 20 நிமிட சார்ஜில், 400 கி.மீ., ரேஞ்ச்

UPDATED : மார் 11, 2026 11:06 AMADDED : மார் 11, 2026 07:50 AM


Google News
Latest Tamil News
'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், 'சி.எல்.ஏ., 250 பிளஸ்' என்ற மின்சார சொகுசு செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை உருவாக்கிய கார்களில், இது மிகவும் புத்திசாலித்தனமான கார் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நீளம் 4.7 மீ, ரியர் வீல் டிரைவில் வரும் இந்த கார், அந்நிறுவனத்தின் 800 வோல்ட் ஹை வோல்டேஜ் 'ஸ்கேட் போர்ட்' உற்பத்தி தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில், மின்சார கார் உட்பட எரிவாயு கார்களையும் உற்பத்தி செய்ய முடியும். இதில், 85.5 கி.வாட்.ஹார்., லித்தியம் பேட்டரி கிடைக்கிறது. முழு சார்ஜில், 792 கி.மீ., வரை பயணிக்கலாம். 240 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரில் 20 நிமிடம் சார்ஜ் செய்தால், 400 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம்.

Image 1547462


காற்றை எளிதாக கிழித்து வேகமாக பயணிக்கும் வகையில், இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பென்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள மென்பொருளில் இது இயங்குகிறது. சராசரி மனிதர்களிடம் பேசுவதை போல் காரிடம் பேச, சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, மைக்ரோசாப்ட் பின்ஜ் ஆகிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஒருகிணைக்கப்பட்டுள்ளன.

2 - ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ், 12 சென்சார்கள், 4 ரேடார்கள், 10.25 மற்றும் 14 அங்குல இரு டிஸ்பளேக்கள், 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் 2 பிளஸ் பாதுகாப்பு, ஒளிரும் முன்புற கிரில், ஏ.எம்.ஜி., ஸ்டைல் வடிவமைப்பு, 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 8 காற்று பைகள் என பல அம்சங்கள் இந்த காரில் வந்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us