பேசினோ - எஸ் யமஹா வழங்கும் 'ஆன்ஸர் பேக்' வசதி
பேசினோ - எஸ் யமஹா வழங்கும் 'ஆன்ஸர் பேக்' வசதி
பேசினோ - எஸ் யமஹா வழங்கும் 'ஆன்ஸர் பேக்' வசதி
UPDATED : ஜூன் 19, 2024 12:08 PM
ADDED : ஜூன் 19, 2024 12:06 PM

'யமஹா மோட்டார் இந்தியா' நிறுவனம்', பேசினோ எஸ்' என்ற புதிய வகை பேசினோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம், டிரம், டிஸ்க் மற்றும் எஸ் என மூன்று வகையில் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகிறது.
இந்த ஸ்கூட்டரை வித்தியாசப்படுத்த, 3 புதிய நிறங்களிலும், 'ஆன்ஸர் பேக்' என்ற பிரத்யேக அம்சத்தையும் சேர்த்துள்ளனர். அதாவது, ஸ்கூட்டர் பயணிக்கும் இடத்தை கண்டறிய இந்த முக்கிய அம்சம் பயன்படுகிறது. இதனை, யமஹாவின் மொபைல் ஆப் மூலம் உபயோகிக்கலாம்.
மற்றபடி, இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாறுதல்களும் இல்லை.
விலை - ரூ. 93,730