பல்சர் என் 160 பாதுகாப்பு கவசத்தை அதிகரித்த பஜாஜ்
பல்சர் என் 160 பாதுகாப்பு கவசத்தை அதிகரித்த பஜாஜ்
பல்சர் என் 160 பாதுகாப்பு கவசத்தை அதிகரித்த பஜாஜ்
ADDED : ஜூன் 19, 2024 12:10 PM

'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், அதன் 'பல்சர் என் 160' பைக்கை புதுப்பித்து, புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
பைக்கின் நிலைத்தன்மையை அதிகரிக்க, புதிய 33 எம்.எம்., யூ.எஸ்.டி., போர்க் முன்புற சஸ்பென்ஷன்கள், வெவ்வேறு சுழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ரோடு, ரெயின் மற்றும ஆப்ரோடு என 3 ஏ.பி.எஸ்., ரைட் மோடுகள், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி ஆகியவை பைக்கின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கிறது.
புதிய டாஷ் போர்டுடன் கூடிய ப்ளூடூத் வசதி, மிகவும் பழக்கப்பட்ட அதே 164.82 சி.சி., ஆயில் கூல்டு இன்ஜின், அலாய் சக்கரங்கள், 4 நிறங்கள் உட்பட பல அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன.
விலை - ரூ. 1.40 லட்சம்