ஆர் 1300 ஜி.எஸ்., பி.எம்.டபுள்யு.,வில் பவருக்கு பஞ்சமில்லை
ஆர் 1300 ஜி.எஸ்., பி.எம்.டபுள்யு.,வில் பவருக்கு பஞ்சமில்லை
ஆர் 1300 ஜி.எஸ்., பி.எம்.டபுள்யு.,வில் பவருக்கு பஞ்சமில்லை
ADDED : ஜூன் 19, 2024 12:13 PM

'பி.எம்.டபுள்யு., மோட்டாராட் இந்தியா' நிறுவனம், சந்தையில் இருக்கும் 'ஆர் 1250 ஜி.எஸ்-,' டூரிங் பைக்கிற்கு பதிலாக, புதிய 'ஆர் 1300 ஜி.எஸ்.,' பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, 40,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கிற்கு புதிய 1300 சி.சி., பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த இன்ஜினை விட, இதற்கு இன்ஜின் சி.சி., பவர் மற்றும் ப்யூயல் டாங்க் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 12 கிலோ குறைக்கப்பட்டு, 237 கிலோவாக இருக்கிறது.
மேலும் இதில், கிராஸ் ஸ்போக் வீல்கள், எலக்ட்ரானிக் வின் ஸ்கிரீன், குவிக் ஷிப்டர் வசதி, சென்டர் ஸ்டாண்ட், ரைட் மோடுகள், அடாப்டிவ் ஹெட்லைட்டுகள், ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் முன்புற விபத்து எச்சரிக்கை வசதி, ரேடார் பாதுகாப்பு ஆகியவை உள்ளன.
விலை - ரூ. 20.95 லட்சம்