Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்கள் சொல்கிறோம்!

கேளுங்கள் சொல்கிறோம்!

கேளுங்கள் சொல்கிறோம்!

கேளுங்கள் சொல்கிறோம்!

ADDED : ஆக 14, 2019 09:20 AM


Google News
Latest Tamil News
வெள்ளெருக்கம் செடியை வீட்டில் வளர்க்கலாமா?

டி.இந்திராணி, சாத்தூர்

பூஜைக்கு ஏற்றது என்றாலும் வெள்ளெருக்கு, ஊமத்தை, ஒதிய மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது.

* பூஜையறையில் முன்னோர் படங்களை வைத்து வழிபடலாமா?

தனுஜா, திருவள்ளூர்

சுவாமி படங்களுடன் வைக்காமல், சற்று தள்ளி வைத்து வழிபடலாம்.

திருவாரூர் தேரை 'ஆழித்தேர்' என ஏன் சொல்கிறோம்?

ஜெயா, மதுரை

ஆழி என்பதற்கு 'பரந்து விரிந்த' 'அளவிடமுடியாத' என்பது பொருள். இதனால் கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது. இது அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்க தேர்.

கோயில்களில் தீர்த்த உற்ஸவம் நடத்துவது ஏன்?

எஸ்.அனுஷ்கா, சென்னை

திருவிழா முடிவில் மழை பெய்யவும், விவசாயம் பெருகவும் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது சுவாமியை கோயில் குளத்தில் நீராட்டுவர். அதில் தேவர்கள், முனிவர்கள் நீராடி அருள்புரிவதாக ஐதீகம். இதில் பங்கேற்றால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

* மற்றவர் ஏற்றிய விளக்கிலிருந்து விளக்கேற்றலாமா?

சி.பி.சிவலிங்கம், கோவை

கோயிலின் சார்பாக பெரிய தீபம் ஒன்று ஏற்றப்பட்டு இருக்கும். அதிலிருந்து தீபம் ஏற்றுங்கள்.

* பூஜை நேரத்தில் குழந்தைகள் அழுதால் வீட்டுக்கு ஆகாதா?

ஆர்.ரக் ஷனா, பெங்களூரு

இல்லை. தவத்தின் பயனாக கிடைத்த வரம் குழந்தை. அவர்களின் சிரிப்பை ரசிப்பதும், அழுகையை கேட்டு உதவுவதும் நம் கடமை. பூஜை நேரத்தில் குழந்தையின் அழுகை இயல்பான ஒன்றே. அதற்கு கடவுள் கோபம் கொள்ள மாட்டார்.

* கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?

எம்.யஷ்வந்த், மதுரை

கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய துாரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதை 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பர்.

தனிஷ்டா நட்சத்திரத்தில் அகால மரணமடைந்தாலும் பரிகாரம் அவசியமா ?

ஏவி.தியாகராஜன், பரமக்குடி

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்கள் புண்ணிய உலகத்தை அடைவர். ஆனால் இதில் ஒருவர் இறந்தால் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினர் பாதிப்புக்கு ஆளாவர். இயற்கை, அகால மரணம் எதுவானாலும் தனிஷ்டா பஞ்சமிக்கு உரிய பரிகாரம் செய்வது அவசியம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us