Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கடவுளே நமக்கு துணை!

கடவுளே நமக்கு துணை!

கடவுளே நமக்கு துணை!

கடவுளே நமக்கு துணை!

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
* உடல், உடை இரண்டையும் விட மேலானது உள்ளம். உடலையும், உடையையும் எவ்வளவு தூய்மையாக வைத்திருந்தாலும், உள்ளத்தூய்மை இல்லாவிட்டால் சிறிதும் பயனில்லை.

* தவறு செய்யும்போது உள்ளத்தில் அழுக்கு சேர்ந்து விடுகிறது. செய்யும் செயல்களில் தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* நல்ல நோக்கத்துடன் செயல்புரியும்போது தவறு நேர்ந்தால், அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. அதை திருத்திக் கொண்டால் போதும்.

* நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை குறுக்கிடுகின்றன.

* எந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். அது, அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us