முந்தய சனிப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம் : ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை பெற்று சிறப்பான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். பொதுவாக சனி பகவான் மூன்றாம் இடத்தில் வந்து அமரும்போது வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களை அளிப்பார் என்பார்கள். வீடு, வண்டி, வாகனம், மனை, கால்நடை போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கும் வாய்ப்பினை உருவாக்கித் தருவார். அதுமட்டுமல்லாது, உங்கள் தேவைகள் யாவும் எளிதில் பூர்த்தியாகும். மனதில் இருந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் ஏதுவாக அமையும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வரும் காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடிவடையும். நினைத்ததை நடத்தி முடிக்கும் செயல்திறன் அதிகரிக்கும். இழுபறியில் இருந்து வரும் வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவினைக் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் மூன்றாவது கரமாக செயல்பட்டு வரும்.
பரிகாரம் : பிரதோஷ வழிபாடு சிறப்பான பலனைத் தரும். பிரதோஷ நாட்களில் அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று உங்களால் இயன்ற கைங்கரியங்களைச் செய்து வாருங்கள்.

























