தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/விருச்சிகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

மாத ராசி பலன் : விருச்சிகம்
17 ஆக 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்

விழிப்புடன் செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். எடுத்த வேலைகள் வெற்றிதரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் புகழ் என்ற அனைத்தும் கிடைக்கும் நேரம் இந்த நேரம் என்பதால் சமூகத்தில் தனித்த செல்வாக்கு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பொறுப்பும் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வருவதுடன், குழந்தை பாக்யத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளுக்காக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் மழையினால் சங்கடங்களை அடைய வேண்டியதாக இருக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.
சந்திராஷ்டமம்: செப். 5.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 21, 27, 30. செப். 3, 9, 12.

பரிகாரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.

அனுஷம்
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் வக்கிர கதியில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வரவு வரும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உறவினருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவுடன் சக பணியாளர்களின் ஊக்கமும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு  எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் விலகும். வெளிநாடு செல்ல விரும்புகிறவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். சிலர் செய்துவரும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாடகை இடத்தில் தொழில் செய்து வந்தவர்கள் சொந்த இடத்தில் தொழில் செய்யக்கூடிய அளவிற்கு நிலை உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடுதல் லாபம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு சூழ்நிலை சாதகமாகும். செல்வாக்கு உயரும். புதிய பதவி பொறுப்பு கிடைக்கும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் நன்மைகள் கூடுதலாகும். பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். விவசாயிகளுக்கு நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: செப். 5, 6.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 26, 27. செப். 8, 9, 17.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

கேட்டை
எந்த நிலையிலும் வாழக்கூடிய திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாகும். வித்யா காரகன் புதன் செப். 3 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும். வரவே வராது என்று கோயில் உண்டிக் கணக்கில் எழுதிய பணமும் வரும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கல்வியாளர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். பாக்ய குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதும், உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதி ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதும் முன்னேற்றத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு அதற்குரிய தகவல் வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வருபவர்களுக்கும் தொழிலை விரிவு செய்யும் பணியை மேற்கொண்டிருப்பவர்களுக்கும் எடுத்த வேலைகள் வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் வாகனம் என்ற கனவு நனவாகும். விரய செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவன் மனைவிக்குள் நீடித்த சச்சரவு இருந்த இடம் தெரியாமல் போகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள்.
சந்திராஷ்டமம்: செப். 6, 7.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 23, 27. செப். 5, 9, 14.

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us