வாசகர்கள் கருத்துகள் (1)
eduvumey nadakkala nu 5 yrs ha amaithiya irukkuravar sollita
இலங்கை தமிழர்களின் வாழ்வியலை மையப்படுத்தி அவ்வப்போது தமிழில் சில படங்கள் வெளிவருவது உண்டு. அந்த வகையில் தற்போது சோமிதரன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் நீளிரா. கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் ராணா கைப்பற்றி வெளியிட்டுள்ளார். இந்த படம் 1988ல் இலங்கையில் போர் சூழலில் ஒரு தமிழ் குடும்பத்தினரின் திருமண வீட்டில் ஓர் இரவு நடைபெறக்கூடிய திகில் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. 90 நிமிடங்களே ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமகால சூழ்நிலையில் நடைபெற்று வரும் போரால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை. அப்படி ஒரு போர் சூழலில் திருமணம் ஒன்று நடக்கிறது. அதற்கு முந்திய இரவை அவர்கள் எப்படி கடந்து வருகிறார்கள் என்பதை ஒரு எமோஷனல் திரில்லராக கொடுத்திருக்கிறார்கள். அந்த இரவை கடந்து வந்த நபரான இயக்குனர் சோமிதரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த கால போர், இப்போது இருக்கும் நிலைமை ஆகியவற்றிற்கு ஒரு மவுன சாட்சியாக இந்த படம் நம் எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.. இது போரை விரும்பாதவர்களுக்கான படம். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது” என்று கூறியுள்ளார்.
eduvumey nadakkala nu 5 yrs ha amaithiya irukkuravar sollita