ராமநாதபுரம் பெண்ணாக மமிதா பைஜூ
ADDED : 11 hours ago
விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கர' படத்தில் முதன்முறையாக பக்கா கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் மமிதா பைஜூ. இது குறித்து அவர் கூறுகையில், ''தமிழ் ,மலையாளத்தில் மார்டன் பெண்ணாக, துறுதுறு பெண்ணாக நடித்து வந்தேன். கர படத்தில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் இருக்கும் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அந்த படத்தில் என் கேரக்டர், கெட்அப், உடை, பேச்சு என அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். சின்ன வயதில் இருந்து தனுஷ் படம் பார்த்து வளர்ந்தேன். இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி. அவர் ஒரு பல்கலைக்கழகம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சக நடிகர்களுக்கு அவர் சுதந்திரம் தருகிறார். அவர்களை ஊக்குவிக்கிறார்'' என்கிறார்.