அஜித் திருமணநாளில் ‛அமர்க்களம்', பிறந்தநாளில் ‛பில்லா' ரீ ரிலீஸ்
சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அமர்க்களம் படம், ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கேப்டன் பிரபாகரன், அமைதிப்படை படங்களை ரீ ரிலீஸ் செய்த கார்த்திக் என்பவர் அதை வெளியிடுகிறார். ஏப்ரல் 24ம் தேதி அஜித், ஷாலினி திருமண நாள் என்பதால் அந்த தேதியில் அமர்க்களத்தை வெளியிடுகின்றனர்.
அதேப்போல் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால், அன்றைய தேதியில் பில்லா படமும் ரீ ரிலீஸ் ஆகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக யுவனின் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் பிஜிஎம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பில்லா படம் 18 ஆண்டுகளுக்கு பின்னரும், அமர்களம் படம் 26 ஆண்டுகளுக்குபின்னரும் ரீ ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் மங்கத்தா படம் ரீ ரிலீசில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளதால் கோடை விடுமுறையில் வேறு பெரிய படங்கள் இல்லாததால் அமர்களம், பில்லாவை ரீ ரிலீஸ் செய்கிறார்களாம். அஜித்தின் புதுப்படத்தை எப்ப அறிவிப்பீங்க. மே 1ம் தேதி பிறந்தநாளிலாவது அப்டேட் வருமா என கேட்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.