உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன பெத்தி ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன பெத்தி ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் பெத்தி. இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இந்த படம் ஏற்கனவே மார்ச் 27ல் வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 30க்கு மாற்றி வைக்கப்பட்டது. பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் திரைப்படம் வெளியாகிறது என்பதற்காகவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் சமீப காலமாக இந்த படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அதனால் ஏப்ரல் 30ல் படம் வெளியாவது சந்தேகம் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனாலும் ராம்சரண் அதை மறுக்கும் விதமாக படத்தின் ரிலீஸில் தாமதம் இருக்காது என்று கூறி வந்தார். இந்த நிலையில் ஏற்கனவே வெளியான செய்திகளின்படியே தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேதி குறிப்பிடாமல் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல பவன் கல்யான் பட ரிலீஸுக்காக எல்லாம் இந்த படம் தள்ளி வைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. காரணம் இந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !