உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவிஷ், ரவி அரசு புதிய கூட்டணி!

பவிஷ், ரவி அரசு புதிய கூட்டணி!

நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ். தனுஷ் இயக்கிய ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். படம் பெரிதாக போகவில்லை என்றாலும் சுமாரான வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்த படமாக 'லவ் ஓ லவ்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பவிஷ். இந்தபடம் பாதிக்கு மேல் முடிந்துள்ளது. தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்காக பவிஷ் கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் ஈட்டி, ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலை வைத்து ‛மகுடம்' என்ற படத்தை இயக்கினார். சில பிரச்னைகளால் அந்த படத்தைவிட்டு அவர் விலகினார். இதனால் விஷாலே ‛மகுடம்' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் பவிஷ் நாராயணனுக்கு ஒரு கதை கூறியுள்ளார். கதையும் பவிஷிற்கு பிடித்துள்ளதாம். இதனால் இவர்கள் கூட்டணியில் படம் உருவாகுவது உறுதியாகியுள்ளது. தற்போது இப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !