ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கருப்பு'. த்ரிஷா, சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற மே 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி ஆர்ஜே பாலாஜி அளித்த பேட்டியில் கூறியதாவது...
என் படங்களுக்கு எப்பவும் பேமிலி ஆடியன்ஸ் தான் பிளஸ். நமக்கு சூர்யாவை எப்படியெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதற்காக ஒரு ரசிகன் மாதிரி பார்த்துப் பார்த்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். கருப்பு படத்தில் அவர் ரகளையாக காமெடி செய்திருக்கிறார். இப்படி இவரை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' என்று கொஞ்சம் சீரியஸான படங்களில் நடித்தார். அவரின் படத்தை என்னோட ஸ்டைலில் உருவாக்கியுள்ளேன். எமோஷன், கலகலப்பு இரண்டிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.