உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் ஏப்ரல் 24ல் வெளியாகாதா?

ஜனநாயகன் ஏப்ரல் 24ல் வெளியாகாதா?

விஜய் நடித்த ஜனநாயகன் படம் நெட்டில் லீக் ஆனாலும், தியேட்டரில் எப்போது ரிலீஸ் என்று ஒரு தரப்பினர் கேள்வி கேட்டு வருகின்றனர். ஏப்ரல் 24ம் தேதி படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு என்று கூறப்பட்ட நிலையில், இப்போது அதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாம். காரணம், படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லையாம். அது வந்த பிறகே ரிலீஸ் பணிகளை தொடக்கலாம் என்று படக்குழுவும், தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் நினைக்கிறார்களாம்.

பட ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சென்சார் சான்றிதழ் கிடைக்கவிட்டால், இன்னும் பட ரிலீசை தள்ளிப்போக வேண்டியது வரும். மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனால் அது படத்துக்கு இன்னும் பாதிப்பு வரும் என நினைக்கிறார்களாம். சரி, எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்று கேட்டால், யாரிடமும் பதில் இல்லை. தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய் தரப்பு, ஜனநாயகன் பட ரிலீசால் தேர்தலில் பிரச்னை வரக்கூடாது. ஓட்டு பதிவில் பாதிப்பு வரக்கூடாது என்றும் நினைக்கிறதாம். அதனால் இப்போதைக்கு படம் வெளியாக வாய்ப்பு குறைவே என்று தான் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !