உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாண்டிராஜ் உடன் மீண்டும் இணையும் கார்த்தி

பாண்டிராஜ் உடன் மீண்டும் இணையும் கார்த்தி

கார்த்தி நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் வா வாத்தியார். நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தில் அவருடன் கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். கடந்த ஜனவரி 14ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து விட்டது. அதையடுத்து தற்போது சர்தார் 2, மார்ஷல் போன்ற படங்களில் நடித்து வரும் கார்த்தி, அடுத்தபடியாக பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். சூர்யா தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் பாக்ஸ் ஆபீஸில் 70 கோடி வசூலித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !