உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ?

மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ?


தமிழ் சினிமாவிலிருந்து 'ஜனநாயகன்' படத்துடன் விடை பெறுகிறார் விஜய். அவருக்கு கடும் போட்டியாக இருக்கும் சமகால நாயகன் என்றால் அது அஜித் மட்டுமே. ஆனாலும் கடந்த ஒரு வருட காலமாக அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வரவில்லை.

அவரது கடைசி படமான 'குட் பேட் அக்லி' படம் கடந்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. அவரது அடுத்த படமான 64வது படத்தை இயக்கப் போவது ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பது முடிவாகிவிட்டது. அவரும் இது குறித்து பேசிவிட்டார்.

இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஜனவரி மாதமே வெளியாகும் என்றார்கள். ஆனால், தயாரிப்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படாத காரணத்தால் அறிவிப்பு வெளியாகவில்லை என்று சொன்னார்கள்.

அஜித்தை வைத்து ஏற்கெனவே படங்களைத் தயாரித்த சில நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டது. இருந்தாலும் அஜித் கேட்ட சம்பளத்தை ஏற்றுக் கொள்ளாமல் பின்வாங்கினார்கள் என்று தகவல் வெளியானது. அடுத்து அஜித்தே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படம் தயாரிக்கப் போகிறார் என்றும் ஒரு தகவல் வந்து, பின்னர் அதுவும் உண்மையில்லை என்றானது.

மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் வர உள்ளது. அன்றாவது படத்தின் அறிவிப்பு வருமா என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !