8 படங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாருக்குக் கிடைத்த வெற்றி
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் கொடுத்து வந்தார். ஆனால், என்ன நேரமோ அவர் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தான் கொடுத்து வந்தன. சில படங்கள் மோசமான தோல்வியையும் தழுவின.
ஆனால், மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பூத் பங்களா' படம் அவருக்கு மீண்டும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. தபு, வாமிகா கபி, பரேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் உலக அளவில் 150 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023ல் வெளிவந்த 'ஓ மைகாட் 2' படம்தான் அவருடைய கடைசி வெற்றிப் படமாக இருந்தது. அந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன் பின் வெளிவந்த சுமார் 8 படங்கள் அவருக்கு தோல்வியைத்தான் தந்தன. அதைத் தற்போது 'பூத் பங்களா' மாற்றிவிட்டது. அடுத்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் அக்ஷய் குமார்.