ஆயுத பூஜைக்கு திரைக்கு வரும் சேயோன்
ADDED : 3 hours ago
பராசக்தி படத்திற்குப் பிறகு தாய்க்கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கும் சேயோன் என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். மதுரை வட்டார கதையில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பாக்யஸ்ரீ போர்சே, அருள் தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வருகிற மே மாதம் 15ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் தொடங்குகிறது. அதையடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு சேயோன் படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கிறார்கள்.