அர்ஜூன் நடிக்கும் பிளாஸ்ட்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிப்பில் குடும்ப சென்டிமென்ட் உடன் ஆக் ஷன் திரில்லர் கலந்து உருவாகும் படம் 'பிளாஸ்ட்'. இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 'பிளாஸ்ட்' தலைப்பும் , பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகி உள்ளது.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ''தாய், தந்தை, மகள் ஆகியோரை கொண்ட அன்பான குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதையும் அதில் அர்ஜுனை இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். 'கேஜிஎப்' ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்'' என்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன் படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது, டியூட் படத்தை வெளியிட்டது. இந்த நிறுவனம்தான் இப்போது அவர் உதவியாளரை இயக்குனர் ஆக்கி உள்ளது.