உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 33 வருடங்களுக்குப் பிறகு 'கல்நாயக் பார்ட் 2' துவங்கியது

33 வருடங்களுக்குப் பிறகு 'கல்நாயக் பார்ட் 2' துவங்கியது


பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் சமீப வருடங்களாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதேசமயம் 90களில் அவர் கதாநாயகனாக கோலோச்சி வந்த சமயத்தில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் 'கல்நாயக்'.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 'கல்நாயக் ரிட்டன்ஸ்' என்கிற பெயரில் உருவாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. மேலும் கல்நாயக் ரிட்டன்ஸ் டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. கல்நாயக் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான சுபாஷ் கை தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !