தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!
ADDED : 9 hours ago
‛பரியேறும் பெருமாள்' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதன்பிறகு ‛கர்ணன், மாமன்னன், வாழை, பைசன்' என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். இந்நிலையில் கர்ணன் படத்தை அடுத்து மீண்டும் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ், தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படத்தை அவரது உதவி இயக்குனர் அரவிந்த் இயக்குகிறார். அமீர், ஸ்வஸ்திகா முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. மேலும், இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை மாரி செல்வராஜே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.