உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார்

நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார்


கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல் படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான பத்ம விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் இன்று (மே 25) முதல்கட்டமாக 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகள் என 66 பேருக்கு விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் ஞானதந்திர மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபிஆர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான 'பத்ம விபூஷன்' விருது அறிவிக்கப்பட்டது. மறைந்த கணவரின் சார்பாக அவரது மனைவியும், மூத்த நடிகையுமான ஹேமமாலினி இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மீதமுள்ள நபர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !