உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என இந்த பட்டியல் செல்கிறது. இந்நிலையில் சினிமாவை போன்று தமிழ் சின்னத்திரையை சேர்ந்த குஷ்பு, குட்டி பத்மினி தலைமையிலான சின்னத்திரை கவுன்சில் நிர்வாகிகள், முதல்வர் விஜயை சந்தித்து பேசினர். அப்போது சின்னத்திரையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‛‛ஒரு சக நடிகராக என் தம்பி விஜய் இப்போது முதல்வராகி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவையில் நடந்த சம்பவம்(சிறுமி பாலியல் கொலை) மிகவும் கஷ்டமானது. நமது சமுதாயத்தில் இன்னும் இந்த மாதிரி மிருகங்கள் வாழுகின்றனர். அவுங்க(திமுக.,) ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்பதை மறந்துவிட்டு 10 நாட்களுக்குள் எல்லாவற்றையும் சரி செய்யணும் என்றால் எப்படி முடியும். இப்போது தான் விஜய் வந்திருக்கிறார், கொஞ்சம் டைம் கொடுங்கள்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !