தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!
'கர, ஜனநாயகன்' படங்களுக்கு பிறகு சூர்யாவுடன் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் விஷ்ணு விஷாலுடன் 'இரண்டு வானம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் மமிதா பைஜூ. இதையடுத்து மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் 'எல்லம்மா' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்தி வெளியானபோது அதற்கு அவர் மறுப்பு செய்தி வெளியிட்டிருந்தார். பின்னர் சாய் பல்லவி பெயரும் அடிபட்டது. இந்நிலையில் தற்போது மமிதா பைஜுவை இயக்குனர் வேணு எல்தண்டி ஒப்பந்தம் செய்திருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த எல்லம்மா படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் , ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.