உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா

பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, அதையடுத்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடித்து வரும் ஸ்ரீலீலா அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய நடிப்பு வாழ்க்கையை கன்னட திரையுலகில் தொடங்கினேன். அதன்பிறகு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என நடிக்கிறேன். நான் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மட்டுமின்றி தற்போது தமிழும் பேசி வருகிறேன். இப்படி பிராந்திய மொழிகளை தெரிந்து கொண்டு நடிக்கும் போது அந்த மக்களுக்கும் கலாச்சாரத்திற்கும் மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும். அதனால் தற்போது எந்த மொழிகளில் நடித்தாலும் அந்த மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டுகிறேன். இது அந்தந்த மொழிக்கு நான் செலுத்தும் மரியாதையாகும் என்கிறார் ஸ்ரீ லீலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !