உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‛பிளாஸ்ட்' படம் வெளியாகி உள்ளது. சென்னையில் படத்தை பார்த்தபின் நடிகர் அர்ஜூன் பேசியது, ‛‛இந்த படத்தில் என்னை போலவே அபிராமி பைட் பண்ணி இருக்கிறார். சிறந்த டான்சரான பிரீத்தி முகுந்தன் இனி சிறந்த பைட்டர் எனவும் அழைக்கபடுவார். படம் பார்த்தவர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாருக்கும் நல்ல கேரக்டர் அமைந்துள்ளது.

பெண்கள் தைரியமாக சண்டை போடணும் என்ற திரைக்கதை அருமையாக உள்ளது. இப்ப இருக்கிற சமூகத்தில் இப்படி வளர்க்கணும் என்ற எண்ணம் ஏற்படும். நானும் என் பெண்ணை இப்படி வளர்த்தேன். எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து போராடணும் என்ற கருத்தை படம் சொல்கிறது. வருங்காலத்தில் பள்ளிகளில் தற்காப்புகலை பாடமாக இருக்கணும்.

முதல்வன் பார்ட் 2 வருமா என தெரியாது. முதல்வன் படத்துடன் இந்த ஆட்சியை ஒப்பிடுவது மகிழ்ச்சி. நான் ரீல் முதல்வன். எனக்கு நண்பர் முதல்வர் விஜய் மீது நம்பிக்கை இருக்கிறது. 100 சதவீதம் நல்லது செய்வார். அதற்கான அறிகுறிகள் தெரியுது. அதுக்கு டைம் கொடுக்கணும்.

சனாதனம் என்பது ஒருவகை வாழ்க்கைமுறை. தப்பு, தண்டா பண்ணக்கூடாது, திருடக்கூடாது, மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்பட கூடாது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்கிறது. சின்ன வயதில் உங்களை நன்றாக பார்த்தது போல, வயதான காலத்தில் உங்க அப்பா அம்மாவை கடவுள் மாதிரி பார்க்கணும் என சனாதனம் சொல்கிறது. சனாதனம் இருக்க கூடாது என்றால் உங்க அப்பா அம்மாவை துரத்தி விடணும். அது தேவையா. சனாதனம் என்பது மதமல்ல, ஒரு வாழ்க்கை முறை, எனக்கு புரிந்துவிட்டது. மற்றவர்களுக்கு புரியணும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Archana Sudhagar
2026-05-28 20:55:03

well said sir