உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3'

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3'

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாள திரைப்படம் திரிஷ்யம் 3. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் குறை இல்லாமல் இருக்கிறது. 58 மணிநேரத்தில் 100 கோடி வசூலித்த இப்படம் தற்போது ஒரே வாரத்தில் 200 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் கேரளாவில் 500 தியேட்டர்களுக்கும் மேலாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லால் நடிப்பில் மீண்டும் 200 கோடி வசூல் தந்த படமாக திரிஷ்யம் 3 அமைந்துள்ளது. மலையாளத்தில் அதிக வசூலைக் குவித்த படமாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‛லோகா சாப்டர் 1' உள்ளது. அதையும் இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !