ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா-4' படத்தில் நயன்தாரா?
ADDED : 19 hours ago
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது நான்காவது பாகமும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் லாரன்ஸ் உடன் பூஜா ஹெக்டே, நோரா பதேகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா ஒரு கீ ரோலில் நடிப்பதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படத்தின் பிளாஷ் பேக்கில் இடம் பெறுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் காஞ்சனா- 4 படக்குழு இது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும், தற்போது 'மூக்குத்தி அம்மன்- 2, ஹாய், டாக்சிக்' போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா ஹிந்தியில் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் .