உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்: லதா ரஜினிகாந்த்

பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்: லதா ரஜினிகாந்த்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என 1995 முதல் அவரது ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருந்தனர். 2020 காலகட்டத்தில் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் ரஜினி சொன்னார். இதனால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள், ரஜினியின் அரசியல் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். இதற்கிடையே திடீர் திருப்பமாக கொரோனா (கோவிட்) பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார் ரஜினி.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய், புதிதாக கட்சி ஆரம்பித்து, வெற்றிப்பெற்று, முதல்வராகவும் ஆனார். அப்போது பேசிய ரஜினிகாந்த், ''நான் 2021ல் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன்'' என்று ஆதங்கத்துடன் கூறினார்.

இந்த நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் யுடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ரஜினிகாந்த் பெரிய தலைவர். 2021ல் அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ். நான் கொஞ்சம் மோசமாக பீல் செய்தேன். அவர் வரவில்லை என்பதற்காக இல்லை. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என தோன்றுகிறது. ஏனெனில் அவருக்குள் பல திட்டங்கள் இருந்தன, நிறைய கனவுகள் இருந்தன. அதனால்தான் வரவில்லை. ஆனால் கெடுவாய்ப்பாக கோவிட் காலத்தில் அப்படி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எப்படி ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருந்தார். லீ குவான் யூ செய்தது மாதிரி செய்ய வேண்டும் என நினைத்திருந்தார். அவரது விஷனை நான் அறிவேன். தமிழகத்தில் ஒரு பெரிய தலைவரை நாம் மிஸ் செய்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (5)

VASANTHA RANI
2026-06-15 15:49:09

எதுக்கு


SJRR
2026-06-15 13:01:37

அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும் என்பார்கள். ஆனால் ரஜினி அவர்களுக்கு 1996ல் இருந்தே தட்டிக்கொண்டிருந்தது. அவரே கூறுவதுபோல் நாட்டை ஆளவேண்டும் என்று அவருடைய தலையில் எழுதவில்லை. அவ்வளவுதான்.


Premanathan S, Cuddalore
2026-06-15 11:10:06

நல்ல வேளை தமிழ்நாடு தப்பித்துக்கொண்டது


இளந்திரையன் வேலந்தாவளம்
2026-06-15 01:56:00

அவரது திரைப்படம் வெளியீட்டுக்கு முன் இந்தமாதிரி அரசியல் பரபரப்பு செய்வது சாதாரணமப்பா....


குமார்
2026-06-14 19:48:12

நல்லவேளை தமிழ்நாடு தப்பித்தது லதா குறிப்பிட்ட அந்த பெரிய தலைவரிடம் இருந்து. இனி 75 வயதுக்கு மேல் தலைவர் சும்மா உதார் விடாமல் ஓய்வெடுப்பது நல்லது.