உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொட்டால் ஷாக் அடிக்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

தொட்டால் ஷாக் அடிக்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்


கடந்த சில வருடங்களாக தமிழில் அதிக படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ஒரு தேக்கநிலை என்று சொல்லலாம். அதே சமயம் செலக்டிவான படங்களை தேர்வு செய்து நடிப்பதாக கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள 'ஓ சுகுமாரி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு கிராமப் பின்னணியில் நடக்கும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இதில் தன்னை யாராவது தொட்டால் அவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போல ஷாக் அடிக்கும் கதாபாத்திரம் என்றும், அதுதான் கதையின் மிகப்பெரிய திருப்பம். இந்த வித்தியாசமான அம்சமே இந்த படத்தை மற்ற படங்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்றும் சமீபத்திய புரமோஷன் ஒன்றில் கலந்து கொண்டபோது ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். பரத் தர்ஷன் இயக்கியுள்ள இந்த படத்தில் திருவீர் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !