உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் ஜீவா; 'தலைவர் தம்பி தலைமையில்' பார்ட் 2?

சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் ஜீவா; 'தலைவர் தம்பி தலைமையில்' பார்ட் 2?


கடந்த 37 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பெற்று தனித்துவமான படங்களை தயாரித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். இதன் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி சமீபத்தில் விபத்தில் காலமானார். தற்போது இந்த நிறுவனம் தனது 99வது படமாக விஷால் நடிப்பில், அவரது இயக்கத்தில் 'மகுடம்' என்கிற படத்தை தயாரித்து வருகிறது. நூறாவது படத்தை முதலில் விஜய்யை வைத்தும், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்தும் தயாரிக்க ஆர்.பி. சவுத்ரி திட்டமிட்டு இருந்தார் என்று செய்திகள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வெளியாகின.

இந்த நிலையில் தற்போது நூறாவது படத்தில் ஆர்.பி. சவுத்ரியின் மகனான நடிகர் ஜீவாவே நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜீவா நடிப்பில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி ஜீவாவுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதனால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையே தங்களது நூறாவது படமாக கூட தயாரிக்கலாம் என்கிற எண்ணமும் இருப்பதாக இன்னொரு தகவல் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !