உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லகான் 25' விழாவில் அமீர்கானை கலாய்த்த கஜோல், ஜூஹி சாவ்லா

'லகான் 25' விழாவில் அமீர்கானை கலாய்த்த கஜோல், ஜூஹி சாவ்லா


2001ல் ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் வெளியான லகான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படம் வெளியாகி தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன் 25-வது ஆண்டு கொண்டாட்ட விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் கஜோல் மற்றும் ஜூஹி சாவ்லா இருவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் இவர்கள் நடிக்கவில்லை என்றாலும், 1997ல் இவர்கள் அமீர்கானுடன் இணைந்து நடித்த இஷ்க் படத்தை தொடர்ந்து இப்போது வரை நல்ல நெருங்கிய நட்பில் இருப்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையிலேயே அமீர்கானை வைத்துக்கொண்டு, “உங்களுக்கு பெண்களை தேர்வு செய்வதில் எப்போதுமே நல்ல ரசனை இருக்கிறது” என்று கிண்டலடித்தனர் இவர்கள் இருவரும்.. இதை சொன்னதுமே அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. அமீர்கான் ஏற்கனவே இரண்டு திருமணங்களை செய்து அவர்களை விவாகரத்து செய்த நிலையில், தற்போது மூன்றாவதாக கவுரி ஸ்ப்ராட் என்கிற இளம் பெண்ணுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அவரையே திருமணம் செய்யப் போகிறார் என்றும் சொல்லப்படும் நிலையில், அதை குறிப்பிட்டுத்தான் கஜோலும் ஜூஹி சாவ்லாவும் அவரை கிண்டலடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !