உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்ரன் : ஆச்சரியத்தில் திரையுலகம்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்ரன் : ஆச்சரியத்தில் திரையுலகம்

தமிழ் சினிமா உலகில் நடக்கும் சில கசப்பான அனுபவங்கள் காலப் போக்கில் கரைந்துவிடும். அப்படியான ஒன்றாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த்தின் 'தர்மன்' படத்தில் நடந்துள்ளதாகக் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

நடிகை சிம்ரன் 2000ம் வருடக் காலகட்டங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோக்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கமல்ஹாசனுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்த 'பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாக 20 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இப்போதும் அப்படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் ரசிகர்கள் தவறாமல் பார்த்து ரசிப்பார்கள். இரண்டு படங்களிலும் சிம்ரன் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்து அவரது நடிப்பையும் ரசிக்க வைத்தது.

அந்தப் படங்களுக்குப் பிறகு அவர் கமல்ஹாசனுடன் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த காலகட்டத்தில் இருவரைப் பற்றியும் சில கிசுகிசுக்கள் கூட வந்தன. இருவருக்கும் இடையே மனஸ்தாபம் என்றெல்லாம் சொன்னார்கள்.

20 வருடங்களுக்குப் பிறகு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் சிம்ரன். இது திரையுலகினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'டூரிஸ்ட் பேமிலி' படம் மூலம் அடுத்த ரவுண்டுக்கு வந்துள்ள சிம்ரனுக்கு இந்தப் படம் முக்கியமான ஒரு படமாக அமையப் போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !