உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மா இன்ட்டி பங்காரம் : 50 கோடி வசூல், 15 கோடி லாபம்

மா இன்ட்டி பங்காரம் : 50 கோடி வசூல், 15 கோடி லாபம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'மா இன்ட்டி பங்காரம்'. இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் டப்பிங் ஆகியும் வெளிவந்தது.

இப்படம் மூன்று நாட்களுக்கு முன்பே 50 கோடி வசூலைக் கடந்துவிட்டது. தற்போது 60 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் சுமார் 11 கோடிக்கு வியாபாரம் நடந்ததாகச் சொல்கிறார்கள். படத்தின் பங்குத் தொகையாக 26 கோடி வரை வந்துள்ளது. அதன் மூலம் படத்தின் லாபம் மட்டுமே 15 கோடியைக் கடந்துள்ளது என்கிறார்கள்.

தியேட்டர் வருமானம் என்பது படத்திற்கான 'போனஸ்' என்கிறார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சமந்தா. படத்தின் சக்சஸ் மீட்டில் அவர் பேசும் போது, “மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் திரையுலகிற்கு வந்ததால், ஒரு டிக்கெட் கூட விற்குமா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால், படம் வெளியாவதற்கு முன்பு, பட்ஜெட்டில் முடிந்தவரை அதிக தொகையை மீட்க முயன்றோம். அதற்கு மேல் கிடைப்பது ஒரு போனஸ் என்றே நாங்கள் கருதினோம்; அது ஒரு அற்புதமான போனஸாகவே அமைந்தது,” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !