'குரத்தி' ஆக தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்!
ADDED : 1 hours ago
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியினரின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூரை கடந்த சில வருடங்களாக தமிழில் பல இயக்குனர்கள், ஹீரோக்கள் நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இயக்குனர் சற்குணத்திற்கு கிடைத்துள்ளது என்கிறார்கள். அதன்படி, சற்குணம் விரைவில் ஒரு வெப் தொடரை இயக்கவுள்ளார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'குரத்தி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வெப் தொடரை நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.