மோகன்லாலுக்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போர்ஸ்
ADDED : 1 hours ago
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து பாக்யஸ்ரீ போர்ஸ் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது. அதன்படி, கோகுலம் கோபாலன் தயாரிப்பில் மோகன்லாலின் 367வது படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஷ்ணு மோகன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.