உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாம் எப்போது இப்படி இரக்கமற்றவர்களாக மாறினோம் : பாக்யராஜ் இறுதி அஞ்சலி தொடர்பாக ராதிகா பதிவு

நாம் எப்போது இப்படி இரக்கமற்றவர்களாக மாறினோம் : பாக்யராஜ் இறுதி அஞ்சலி தொடர்பாக ராதிகா பதிவு

இயக்குனர், நடிகர் என பன்முகம் காட்டிய படைப்பாளி கே பாக்யராஜ் இரு தினங்களுக்கு முன் திடீர் மாரடைப்பால் காலமானார். அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்து முடிந்தது. பாக்யராஜ் இறுதிச் சடங்கில் நடந்த கூச்சல், குழப்பம் குறித்து நடிகை ராதிகா வெளியிட்ட பதிவு...

‛‛50 ஆண்டுகால மிகச் சிறப்பானதொரு நட்பிற்கு... ஒரு மாபெரும் படைப்பாளிக்கு... தேர்ந்த எழுத்தாளருக்கு... சினிமாவில் அற்புதமான எல்லைகளை வகுத்த ஒரு மனிதருக்கு என் இறுதி விடைபெறல். அவரோடு நான் பல சிரிப்பான தருணங்களைப் பகிர்ந்துள்ளேன், சிறந்த படைப்புகளில் இணைந்து பணியாற்றியுள்ளேன், எப்போதும் எனது குடும்பத்திற்குப் பின்னால் ஒரு தூணாக அவர் நின்றிருக்கிறார்.



​அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியூட்டும் விடைபெறல். அனைவரும் ஒன்று கூடி, தங்களை மறந்து, மவுனமாக துக்கத்தை செலுத்த வேண்டிய ஒரு இடம் இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவராலும் ஒரு சர்க்கஸ் கூடாரமாக மாற்றப்பட்டது.

நாம் எப்போது இந்த அளவிற்கு இரக்கமற்றவர்களாக மாறினோம், அல்லது மாற்றப்பட்டோம்? ​அரசும் திரைத்துறையும் இணைந்து அமர்ந்து, இதற்கான நெறிமுறைகளையும் கூட்டு மேலாண்மை முறைகளையும் வகுக்க வேண்டும். அதன் மூலம், மறைந்த அந்த உன்னத ஆன்மாவிற்கு நாம் அனைவரும் உரிய கண்ணியத்தை வழங்க வேண்டும்'' என பதிவிட்டு அவருடன் இருந்த பழைய மற்றும் இப்போதைய போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !