உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதமர் மோடி 3 மணி நேரம்தான் தூங்குகிறார்! மாதவன் வெளியிட்ட வீடியோ

பிரதமர் மோடி 3 மணி நேரம்தான் தூங்குகிறார்! மாதவன் வெளியிட்ட வீடியோ


ஹிந்தியில் வெளியான 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த மாதவன், தற்போது தமிழில் ஜி.டி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படம் மற்றும் அதிர்ஷ்டசாலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து மாதவன் பேசி ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ''பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். அவரது தாயார் கிராமத்தில் வசித்தவர். மோடிஜி குடும்பத்தினர் ஒருவர் கூட அரசு வேலையில் இல்லை. அவர் இந்திய நாட்டை பற்றி மட்டுமே 24 மணி நேரமும் யோசிக்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த தேச நலன் குறித்து யோசிப்பதும், இந்த நாட்டை எப்படி எல்லாம் வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லலாம் என்று தீவிர ஆலோசனையிலும் ஈடுபடுகிறார். அதோடு யாராக இருந்தாலும் எனது பாலிசிகளை விமர்சனம் செய்யலாம். என்னுடைய பாலிசி பிடிக்கவில்லை என்றால் என்னிடமே சொல்லுங்கள் என்றும் லோக்சபாவில் அவர் பேசுகிறார். இவர்தான் ஒரு நல்ல தலைவர். அதனால் நான் எப்போதுமே பிரதமர் மோடியுடன் நான் இருப்பேன். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே உண்டு'' என்று நடிகர் மாதவன் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

மாதவனின் இந்த கருத்துக்களை பலரும் ஆதரித்து வருகிறார்கள். எந்நேரமும் இந்த நாட்டை பற்றிதான் மோடிஜிக்கு கவலை. மக்களுக்கு என்னென்ன நலத்திட்டங்களை கொண்டு வரலாம் என்று என் நேரமும் யோசிக்கிறார். இப்படி நாட்டைப் பற்றியே சதா கவலைப்படுவதால் தான் அவர் சரியாக தூங்குவதில்லை. இந்த வயதிலும் கூட ஒரு இளைஞரை போன்று சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அந்த அளவுக்கு இந்திய நாட்டு மக்கள் மீது அவர் அன்பு வைத்திருக்கிறார் என்று மாதவன் வெளியிட்ட இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

அதே சமயம் இன்னொரு பக்கம், மாதவனுக்கு மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது கொடுத்தார்கள். அதனால்தான் இப்படி அவர் மோடியை புகழ்ந்து பேசுகிறார். அதோடு துபாய் நாட்டில் வசிக்கும் இவருக்கு எப்படி மோடி இத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பது தெரிந்தது. இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து துபாயில் வசிக்கும் இவருக்கு எதற்காக இந்திய அரசு விருது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் மாதவனின் பேச்சை சிலர் விமர்சனமும் செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !