மணிரத்னத்தின் புதிய படத்தின் ஓடிடி உரிமை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!
கடைசியாக கமல் - சிம்பு நடிப்பில் 'தக்லைப்' என்ற படத்தை இயக்கினார் மணிரத்னம். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அப்படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது. அதையடுத்து துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் நடிப்பில் ஒரு காதல் கதையை படமாக்க திட்டமிட்டார். ஆனால் திடீரென்று அந்த முயற்சியை தள்ளிப் போட்டவர், தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதி- சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. மெச்சூரிட்டியான காதல் கதையில் உருவாகும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து லைகா புரொடக்சன், இந்தியா டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கப்போகும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை 20 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படம் ஹீரோயினை பின்னணியாக கொண்ட கதையில் உருவாகும் நிலையில், அந்த கதைக்குள் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வருவது போல சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.