உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரன்வீர் சிங்கின் 'பிரளய்' படப்பிடிப்பு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது!

ரன்வீர் சிங்கின் 'பிரளய்' படப்பிடிப்பு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது!


ஹிந்தியில் 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த ரன்வீர் சிங் அடுத்து புதுமுக இயக்குனர் ஜெய் மேத்தாவுடன் இணைந்துள்ளார். 'பிரளய்' என்று பெயரிடப்பட்ட அப்படம் ஜோம்பி த்ரில்லர் கதையில் உருவாகிறது. உலகம் அழியும் நிலைக்குப் பிந்தைய பின்னணியில் உருவாகும் இப்படம், மிக பிரம்மாண்டமான முறையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் மூலம் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, இந்த பிரளய் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. மேலும், இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்திற்கான தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டார் ரன்வீர். மேலும் படத்தின் உலகத்தை வடிவமைக்கும் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். ஜெய் மேத்தா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரன்வீர் சிங் பங்கேற்கிறார். இதற்கான தயாரிப்பு பணிகளை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார். குறிப்பாக இந்த படத்திற்கு தேவையான கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தன்னை தயார்படுத்தும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். அதோடு 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த பிரளய் படம், விஎப்எக்ஸ் மற்றும் காட்சிகளின் நுணுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது துரந்தர் படத்தின் பட்ஜெட்டை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !