மாலத்தீவில் மாளவிகா, கோவாவில் த்ரிஷா, தென் கொரியாவில் பிரியங்கா
காலையில் எழுந்து இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றதுமே செலவில்லாமல் ஒரு சிறிய உலக சுற்றுலா போனது போன்ற புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. மாலத் தீவில் சுற்றுலாவில் இருக்கும் மாளவிகா, கல்யாணத்திற்குச் சென்ற இடத்தில் கோவாவில் த்ரிஷா, தென் கொரியாவில் பிரியங்கா மோகன் என ஒவ்வொருவரும் விதவிதமான இடங்களில் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தனர்.
மாலத் தீவில் மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படங்களில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. பிகினி ஆடையில் லாங் ஷாட்டில் ஓரிரு புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
குஷ்பு மகள் திருமணத்திற்காக கோவா சென்றிருந்த போது அங்கு எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் த்ரிஷா. புடவை கட்டிய புகைப்படத்திற்கே ரசிகர்கள் லட்சக்கணக்காக லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.
தென் கொரியாவின் சுற்றுலா தூதராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்தார் பிரியங்கா மோகன். அதன்பிறகு அவர் அங்கு சென்றாரா அல்லது பழைய புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்துள்ளாரா என்பது தெரியவில்லை. தனது பயணம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே நடிகையரின் புகைப்படங்கள், ரீல்ஸ்கள் என நிறைந்து காணப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.